இன்று 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்...

தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று 6 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்...

தென்கிழக்கு வங்கக் கடலில் நாளை  ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொள்ளும் எனவும் தீபாவளி தினத்தன்று மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து வரும் 25ம் தேதி வங்க கடற்கரையில் புயல் கரையை கடக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, ஈரோடு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

அடுத்த 4 நாட்கள் தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைபெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com