திண்டுக்கல் | பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் உபகோவிலான அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று கடந்த வாரம் நிறைவடைந்தது.
இந்நிலையில் பழனி நகராட்சிக்கு உட்பட்ட 28வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் அகிலாண்டம் தலைமையில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பால்குடம் எடுத்து மாரியம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அடிவாரம் பகுதியில் இருந்து துவங்கிய பால்குட ஊர்வலம் பழனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மாரியம்மன் கோவிலை அடைந்தது. தொடர்ந்து அருள்மிகு மாரியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஷ்வரி மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், பெண்கள் உட்பட 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.