கடலூர் | பண்ருட்டி அருகே பத்திரக்கோட்டை பட்டிக்குப்பம் பகுதியில் பன்னீர் கரும்புகள் அதிக அளவில் விவசாயிகள் விவசாயம் செய்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்படும் திட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து கடலூர் பகுதியில் உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றனர்.
அதற்கான கரும்புகளை வெட்டப்பட்டு லாரிகளில் லோடு ஏற்றி அனுப்பப்பட்டு வருகிறது. இதற்காக அப்பொழுது உள்ள தொழிலாளர்கள் கரும்புகளை வெட்டி லாரிகளில் லோடு ஏற்றும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க | பேருந்து எரிந்து இராணுவ வீரர் உட்பட இரண்டு பேர் பலி...
இந்த நிலையில், சிலம்பிநாதன் பேட்டை ஊராட்சி பத்திரக்கோட்டை கிராமத்தை சேர்ந்த 52 வயதுடை தனசேகர் என்ற தொழிலாளி கரும்புகளை லாரியில் ஏற்றிக் கொண்டிருக்கும் பொழுது, கரும்பு கட்டு எதிர்பாராமல் தனசேகர் தலையில் விழுந்ததில் தனசேகர் சம்பவ இடத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனை அழைத்துச் சென்றனர். ஆனால் கரும்பு கட்டு பலமாக விழுந்ததில் தனசேகர் உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தொழிலாளி உயிரிழந்த சம்பவமாக நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.