100 நாள் வேலைதிட்டம்: ஆதார் முறையில் ஊதியம்..!

100 நாள் வேலைதிட்டம்:   ஆதார் முறையில் ஊதியம்..!

மகாத்மாகாந்தி 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட பயனாளிகளுக்கு ஆதார் அடிப்படையில் ஊதியம் அளிக்கும் முறை செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

ஒரேமாதிரியாக ஊதியம் வழங்கும் நடவடிக்கையின் அடிப்படையில் ஆதார் எண்ணை இணைக்க, பயனாளிகளுக்கு 4 முறை நீட்டிக்கப்பட்ட காலக்கெடு, 31ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதன்படி இதுவரை 90 சதவீத தொழிலாளர்களின் ஆதாருடன் ஊதியத் தகவல்கள் இணைக்கப்பட்டதாகவும், 31ம் தேதிக்கு மேல் காலக்கெடுவை நீட்டிக்கப் போவதில்லை எனவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க   | "புரட்சி தமிழர் பட்டம் தனியரசுக்கே சொந்தம்" கொங்கு இளைஞர் பேரவை கட்சி எச்சரிக்கை!