செப். 15 முதல் காலாண்டு தேர்வு; அட்டவணை வெளியீடு!

செப். 15 முதல் காலாண்டு தேர்வு; அட்டவணை வெளியீடு!

ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை காலாண்டு பொதுத் தேர்வு (Common Quarterly Exam) கால அட்டவணை வெளியிடப்பட்டது.

ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 19.09.2023 அன்று தேர்வுகள் தொடங்கி 27.09.2023 அன்று வரை நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 15.09.2023 ஆம் தேதி தொடங்கும் தேர்வுகள் 27.09.2023 தேதி வரை நடைபெற உள்ளது.

காலாண்டுத் தேர்வை அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுத் தேர்வாக (Common Quarterly Exam) நடத்த மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி அனைத்து பள்ளிகளிலும் வினா தாள்களை பள்ளி நிர்வாகம் பதிவிறக்கம் செய்வது மற்றும் தேர்வு நடத்துவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. Exam.tnschoolsgov.in என்கிற இணையதளத்தை பயன்படுத்தி வினாத்தாள்களை பள்ளி தலைமை ஆசிரியர் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

நாளை நடைபெறும் தேர்வுக்கு, இன்று மதியம் 2 மணிக்கு மேல் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து அச்சிட வேண்டும். வினா தாள்களை பதிவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சனைகளோ சிக்கலோ இருந்தால் 14417 என்கிற எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் மாவட்ட கல்வி அலுவலரிடமும் தகவல் தெரிவிக்க வேண்டும் போன்ற பத்து வழிகாட்டு நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: "கொரோனாவுக்குப் பின் இளம் வயது உயிரிழப்பு அதிகரிப்பு" அமைச்சர் மா.சு. தகவல்!