தண்ணீரில் தத்தளிக்கும் பள்ளி; கோயிலில் மாணவர்களுக்கு வகுப்பு..!

வேலூர் மாவட்டம் முள்ளிப்பாளையம் பகுதியில் உள்ள நிதி உதவி பெறும் அரசுப் பள்ளி தண்ணீரில் தத்தளிப்பதால் அருகில் உள்ள கோயிலில் மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவலம் அரங்கேறி வருகிறது. 

வேலூர் மாநகராட்சி உட்பட்ட முள்ளிப்பாளையம் அவுலிசியா தர்கா தெரு பகுதியில் இயங்கி வருகிறது பாரதி நிதி உதவி துவக்கப்பள்ளி. இந்த பள்ளியில் 1-முதல் 5-ம் வகுப்பு வரை 75-மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இவ்வாறிருக்க, கடந்த 2-நாட்களாக வேலூரில் பெயத கனமழையின் காரணமாக முள்ளிப்பாளையம், மாங்காய் மண்டி பகுதியில், ஆங்காங்கே இடுப்பளவு மழை நீர் தேங்கியுள்ளது. 

இந்த நிலையில், முள்ளிப்பாளையம் அவுலியா தெருவில் உள்ள பாரதி அரசு நிதிவுதவி பெறும் பள்ளியை சுற்றியும் மழை நீர் இடுப்பளவு தேங்கி நிற்பதால், பள்ளி வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலையில் மாண மாணவிகளை சாலையோரம் உள்ள கோயிலில் அமர வைத்து பள்ளி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாத்தாவின் வார்டு என்பதால், அப்பகுதி மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

இதையும் படிக்க   | சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்... முதலமைச்சர் அவசர ஆலோசனை!!