சீட்டுகட்டு பாடம் நீக்கமா?

சீட்டுகட்டு பாடம் நீக்கமா?

சீட்டுகட்டு பாடம் நீக்கமா?

ஆன்லைன் விளையாட்டின் மூலமாக இதுவரை 34 பேர் தமிழகத்தில் இறந்த நிலையில் ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்வதற்கு தமிழக அரசு சார்பில் அக்.19 தேதி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகரசின் பாடப்புத்தகத்தில் சீட்டுக்கட்டு விளையாட்டினை உதாரணமாக காட்டி பாடம் வடிவமைக்கப்பட்டியிருப்பது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.

 இதுகுறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் எழுந்த நிலையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அந்த பாடப்பகுதியை நீக்க முடிவு செய்துள்ளது. அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பாடத்திட்டம் கொண்டுவரப்பட்டபோது 6 வகுப்பு பாடப்புத்தகத்தில் பூஜ்யம் , குறை எண்கள் , மிகை எண்கள் ஆகியவற்றின் தொகுப்பு , முழுக்களை உருவாக்கும் கணித முறையை விளக்குவதற்கான இப்பாடம் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.