மே 12-ம் தேதியன்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை...!!

மே 12-ம் தேதியன்றே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்க நடவடிக்கை...!!

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டு, மே 12ம் தேதி முதல் காலை 11 மணி முதலே மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குனர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அவ்வறிக்கையில், வரும் 12-ம் தேதி காலை 11 மணி முதல் Www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் இருந்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்களும் உரிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து அச்சான்றிதழ்களில் உள்ள விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியரின் கையொப்பம் மற்றும் பள்ளி முத்திரை இட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 12  ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மே12 ஆம் தேதியே தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ள முடியும்.

இதையும் படிக்க:மதுரையில் புறக்கணிக்கப்படுகிறாரா பி.டி.ஆர்?