சிபிஎஸ்சி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது! 5 சப்ஜெக்டுகளில் 100/100 பெற்ற இரண்டு மாணவிகள்:
12ம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வுகளின் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அதில், இர்ண்டு மாணவிகள் ஐந்து சப்ஜெக்டுகளில் முழு மதிப்பெண்கள் பெற்றுள்ள நிலையில், பாராட்டுகளைக் குவித்து வௌகின்றனர்.

2022ம் ஆண்டின் 12ம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகளை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) வெளியிட்டது. முடிவுகளை cbse.gov.in மற்றும் cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ தளங்களில் தெரிந்துக்கொள்ளலாம். அது மட்டுமின்றி, UMANG செயலி, Digilocker மற்றும், எஸ் எம் எஸ் மூலமும், மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.
மிகவும் கடினமான தேர்வாக அறியப்படும் CBSE தேர்வுகள், நடந்து முடிந்த நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்தாண்டு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில், 94.54 சதவீத பெண்களாக இருக்கின்றனர். மேலும், ஆண்களில், 91.25 சதவீதமும், திருநர்களில், 100 சதவீதமும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர்.
அ து மட்டுமின்றி, தேர்வெழுதிய மாணவர்களில், 1,34,797 மாணவர்கள் 90 சதவீதத்திற்கும் மேலான மதிப்பெண்களையும், 33,432 மாணவர்கள் 95 சதவிதத்திற்கும் மேலான மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். இந்நிலையில், இரண்டு மாணவிகள், அனைத்து சப்ஜெக்டுகளிலும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றுள்ளனர்.
தானியா சிங், யுவக்ஷி விக் ஆகிய இரண்டு மாணவிகளும், 500 மதிப்பெண்கள் பெற்று, CBSEயின் 12ம் வகுப்பு தேர்வில் முன்னிலை வகித்துள்ளனர்.
உத்திரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷார் பகுதியைச் சேர்ந்த தானியா சிங் மற்றும், நொய்டாவைச் சேர்ந்த யுவக்ஷி விக் தான் CBSE தேர்வில் முன்னிலை வகித்து, அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர்.
பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வின் இறுதி தேர்வு ஒன்று மீதம் இருப்பதாகத் தெரிவித்த நிலையில், யுவக்ஷி விக், டெல்லி பல்கலைக்கழகத்தில் (DU) BA (ஹானர்ஸ்) உளவியல் படிக்க விரும்புகிறார். மேலும், தானியா சிங், குடிமைப் பணிகளுக்காக தயாராக வேண்டுமென்ற முனைப்போடு இருப்பதாக, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார். இவர்களது சாதனையை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.