தொடங்கியது MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு !!

தொடங்கியது MBBS, BDS படிப்புகளுக்கான கலந்தாய்வு !!
Published on
Updated on
1 min read

2023-2024 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது.

தமிழ்நாட்டில், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சேர்வதற்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம் செய்திருந்த நிலையில்  கடந்த வாரம் தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதையடுத்து, அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு கடந்த 20-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இணைய வழியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 6 ஆயிரத்து 326 மருத்துவ இடங்கள் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள ஆயிரத்து 768 இடங்களில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 606 இடங்கள் ஒதுக்கப்பட உள்ளது.

இந்த கலந்தாய்வில், தரவரிசைப் பட்டியலில் 25 ஆயிரத்து 856 இடங்கள் வரையுள்ள மாணவர்கள் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வின் முடிவுகள் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com