நடைபெறும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு...

இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான பொது பிரிவுகளுக்கான கலந்தாய்வு 19 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

நடைபெறும் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான பொது பிரிவு கலந்தாய்வு...

2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. குறிப்பாக, 19 ஆம் தேதி சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

சிறப்பு பிரிவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 11 இடங்கள், விளையாட்டு வீரர்களுக்கு 8 இடங்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 46 என மொத்தம் 65 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது.

மேலும் படிக்க | மொத்த இடங்களோ 10,425.. விண்ணப்பங்களோ 76,354.. நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 65,787..!

20 ஆம் தேதி 7. 5% உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 1100 மாணவர்கள் கலந்து கொண்ட நிலையில் அதில் 565 இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

மாணவர்கள் தங்களுக்கு தேவையான இடங்களை தேர்வு செய்த பிறகு சிறப்பு பிரிவு மாணவர்கள் மற்றும் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு இட ஒதுக்கீட்டு ஆணையம் வழங்கப்பட்டது. .

மேலும் படிக்க | ஒலி மாசற்ற தீபாவளியை கொண்டாட வேண்டும் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை வெளியீடு!

மேலும் பொதுப்பிரிவு மாணவர்களுக்கு இணையதளம் வாயிலாக 19ஆம் தேதியிலிருந்து கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில் 25ஆம் தேதி வரையிலும் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு திருடப்பட்டு இருக்கிறது. அதன் பிறகு 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது.

மேலும் படிக்க | பண்டிகையை முன்னிட்டு தொகுதி மக்களுக்கு புத்தாடைகள் வழங்கிய மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்