இந்திய அஞ்சல் துறை காலியான பணியிடங்கள்...எப்படி விண்ணப்பிப்பது...எவ்வளவு பணியிடங்கள்...வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!!!

இந்திய அஞ்சல் துறை காலியான பணியிடங்கள்...எப்படி விண்ணப்பிப்பது...எவ்வளவு பணியிடங்கள்...வாருங்கள் தெரிந்துகொள்ளலாம்!!!

இந்திய அஞ்சல் துறையானது, போஸ்ட்மேன், மெயில் கார்ட், மல்டி-டாஸ்கிங் ஸ்டாஃப் போன்ற பதவிகளுக்கான மொத்தம் 98,083 காலியிடங்களை அதிகாரப்பூர்வ இந்தியா போஸ்ட் இணையதள போர்ட்டலில் வெளியிட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: 

இந்திய அஞ்சல் துறையானது, போஸ்ட்மேன், மெயில் கார்ட், மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் போன்ற பதவிகளுக்கு மொத்தம் 98,083 காலியிடங்களை இந்திய அஞ்சலகம் அதன் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களும் indiapost.gov.in இல் விண்ணப்பிக்கலாம். 

யார் யார் விண்னப்பிக்கலாம்:

இந்திய அஞ்சலக துறையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்திய போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022 க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதற்கான கடைசி தேதியை இந்திய அஞ்சல் துறை விரைவில் அறிவிக்கும்.

விண்ணப்பதாரர்கள் போஸ்ட்மேன், அஞ்சல் காவலர் மற்றும் மல்டி டாஸ்கிங் ஸ்டாஃப் பதவிக்கு அதிகாரப்பூர்வ இந்தியா போஸ்ட் இணையதளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இதற்கான வயது வரம்பு 18லிருந்து 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு செயல்முறை:

  • முதலில் இந்தியா போஸ்ட் இணையதளத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான indiapost.gov.in பார்வையிடவும்.

  • பின்னர், போர்ட்டலின் முகப்புப் பக்கத்தில் உள்ள 'இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022' என்ற இணைப்பைத் க்ளிக் செய்யவும்.

  • அதன் பிறகு, 'இப்போது பதிவு செய்யுங்கள்' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

  • திரையில் தோன்றும் தேவையான விவரங்களுடன் முழுமையான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டும்.

  • விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தேவையான ஆவணங்களை பதிவு படிவத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

  • உங்கள் பெயர், தொலைபேசி எண், பாலினம், பிறந்த தேதி உள்ளிட்ட உங்கள் தகவல்களை பதிவிட வேண்டும்.

  • சரிபார்ப்பிற்காக உங்கள் ஃபோன் எண்ணுக்கு OTP வரும்.

  • விண்ணப்பப் படிவக் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

  • ஆஃப்லைனில் செலுத்த வேண்டும் எனில் ஏதேனும் ஒரு தலைமை தபால் நிலையத்தில் கட்டணத்தை செலுத்தலாம்.

  • அதன் பிறகு, உங்கள் பதிவு படிவம் வெற்றிகரமாக சமர்ப்பிக்கப்படும்.

  • எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

  • கூடுதலாக, "விண்ணப்ப நிலை" என்பதைத் தேர்ந்தெடுத்து தேவையான தகவலை வழங்குவதன் மூலம் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை நீங்கள் சரிபார்க்கலாம். 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஆதார் இல்லாத காரணத்தால் கர்ப்பிணி பெண்ணும் குழந்தைகளும் மரணம்...!!!