தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது....!

தமிழ்நாட்டை சேர்ந்த 3 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது....!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மதுரை தென்காசி மற்றும் திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர்கள்  தேசிய நல்லாசிரியர் விருதைப் பெற்றுள்ளனர்.

ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 5-ம் தேதி ஆசிரியர்  தினத்தை முன்னிட்டு தனது துறையில்  சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் , இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த ஆசிரியர்களுக்கு  குடியரசு தலைவர் திரெளபதி முர்மு தேசிய நல்லாசிரியர்  விருதினை வழங்கினார். 

சிறந்த பணிக்கான இவ்விருதினை  நாட்டில் பல்வேறு  மாநிலங்களிலிருந்து  மொத்தம் 75 ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.  அதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று அரசு ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதினைப் பெற்றனர். 

மதுரை,  அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான முனைவர். டி. காட்வின் தேவனாயகம் ராஜ்குமார்  நல்லாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.  

தொடர்ந்து, தென்காசி, கீழ்ப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மாலதி நல்லாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.   

திண்டுக்கல், குள்ளன்னம்பட்டி அரசு மகளிர்  தொழில் பயிற்சி நிறுவனத்தின் (ஐடிஐ)  துணைநிலை பயிற்சி ஆசிரியர் திரு. சித்திரகுமார் நல்லாசிரியருக்கான தேசிய விருதை பெற்றார்.     

இதையும் படிக்க  | ஆசிரியர் தினம்: மாணவர்கள் உலக சாதனை முயற்சி!