நெய்வேலி எல்.எல்.சி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்தி வைப்பு..!

நெய்வேலி எல்.எல்.சி  ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்  ஒத்தி வைப்பு..!

நெய்வேலி எல்.எல்.சி ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நெய்வேலி எல்.எல்.சியில் பணிபுரியக்கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பாரத பிரதமர் அறிவித்த ரோஸ்கர் மேளா திட்டத்தின் படி பணி நிரந்தரம் செய்ய கோரியும், நிரந்தரபடுத்தும் வரை குறைந்தபட்ச மாத ஊதியம் 50,000 வழங்க கோரியும்,  

அதோடு, என்எல்சிக்கு ஏற்கனவே வீடு நிலம் கொடுத்து உழைத்துக் கொண்டிருக்க கூடிய சொசைட்டி மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்யக்கோரியும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின்  சார்பில் வேலை நிறுத்தம் அறிவிப்பு கூட்டம் நெய்வேலி மத்திய பேருந்து நிலையம் எதிரே உள்ள திடலில் நடைபெற்றது.

 அப்போது,   ஆறு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி என்எல்சி நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் 5000 பேர் வேலை நிறுத்தத்திற்கு கையெழுத்து பெற்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் புதன்கிழமை அன்று பேச்சு வார்த்தையில் சமூகத் தீர்வு எட்டப்படவில்லை என்றால் அன்றிலிருந்து வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

ஆகையால் இன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க   | கையூட்டை கண்டித்து கல் குவாரிகள் வேலை நிறுத்தம் ; ரூ.3 கோடி வர்த்தகம் பாதிப்பு..!