தமிழ் மொழி வகுப்புகள் குறைப்பு: தேசியக்கல்விக் கொள்கைக்கு எதிராக புதுச்சேரி மாணவர்கள் போராட்டம் ..!

தமிழ் மொழி வகுப்புகள் குறைப்பு:  தேசியக்கல்விக் கொள்கைக்கு எதிராக  புதுச்சேரி மாணவர்கள்  போராட்டம் ..!

புதுச்சேரி கல்லூரிகளில்  தேசிய கல்வி கொள்கையை கைவிடக்கோரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் தேசியக் கல்விக்கொள்க கடந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து இந்தாண்டு முதல் அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தேசியக் கல்விக்கொள்கையை அமல்படுத்துவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) வெளியிட்டுள்ளது.

அதில் இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழ் மொழிப் பாடம் 4 பருவங்களாக உள்ளதை 2 பருவங்களாக குறைக்கப்படுவதாகவும், பருவத்திற்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ்மொழி பாடத்தை வெறும் 8 மணி நேரமாக குறைத்து இருப்பதை, கண்டித்தும் தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர் கூட்டமைப்பு சார்பில் சுதேசி மில் அருகே பல்வேறு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தேசிய கல்வி கொள்கையை கைவிடக்கோரி  அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையும் படிக்க   | வராக நதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...!