"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??

"நீட் தேர்வு" பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் என்னென்ன...??

நாடு முழுவதும் இன்று இளநிலை மருத்துவப் படிப்பான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான நீட் நுழைவு தேர்வு நடைபெறுகிறது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

அதன்படி 2023-24-ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு இன்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ல் தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வெழுத 11 லட்சத்து 84,502 மாணவிகள், 9 லட்சத்து 2,930 மாணவர்கள், 13 திருநங்கைகள் என ஒட்டுமொத்தமாக 20 லட்சத்து 87,445 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்தாண்டைவிட 2.15 லட்சம் விண்ணப்பங்கள் அதிகமாகும். Take off your bra, NEET candidate told

தமிழகத்தை பொறுத்தவரை 95,823 மாணவிகள், 51,757 மாணவர்கள், ஒரு திருநங்கை என மொத்தம் ஒரு லட்சத்து 47,581 பேர் நீட் தேர்வுக்கு இந்தாண்டு பதிவு செய்துள்ளனர். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரம் பேர் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில்  தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதவுள்ளனர். 

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்:

நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உட்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும். தேர்வு மையத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஹால்டிக்கெட்டில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, தேர்வு மையத்துக்குள் செல்ல காலை 11.40 மணி முதல் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். தேர்வர்கள் மையத்துக்குள் மதியம் 1.30 மணிக்குள் வந்துவிட வேண்டும். அதன்பின் வருபவர்களுக்கு எக்காரணம் கொண்டும் அனுமதி தரப்படாது. NEET Dress Code 2021 for Male and Female by NTA | adda247

இதுதவிர தேர்வுக்கு ஹால்டிக்கெட் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  அடையாள அட்டையை கட்டாயம் கொண்டு வரவேண்டும். தேர்வர்கள் தங்கள் கையில் வெளிப்படையான தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். மேலும், ஹால்டிக்கெட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் அதை  ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. NEET Exam: Students' Sleeves Cut Off, While Many Forced To Change Clothes  And Remove Jewellery

வழக்கம்போல் தேர்வறையில் செல்போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டுச் செல்ல அனுமதியில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், தோடு, மூக்குத்தி அணியக்கூடாது. தலைமுடியில் ஜடை பின்னல் போடக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் உட்பட இதர வழிமுறைகளையும் மாணவ, மாணவிகள் தவறாது பின்பற்ற வேண்டும். தவறான விடைக்கு நெகட்டிவ் மார்க் இருப்பதால், தேர்வின் போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

இதுகுறித்த கூடுதல் தகவல்களை http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்று தேசிய தகுதிகாண் தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.