கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,? -உயர் கல்வித்துறை அமைச்சர் பதில்.,! 

கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது.,? -உயர் கல்வித்துறை அமைச்சர் பதில்.,! 

பல்கலை கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கும் என, உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு முறை வெளியிடப்பட்டுள்ள நிலையில், கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை எவ்வாறு மேற்கொள்வது? உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் பங்கேற்றனர்.  

தற்போது கொரோனா பரவல் குறைந்து விட்ட நிலையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், அரசின் இணைப்பு மற்றும் உறுப்பு கல்லூரிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதனையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்கலை கழகங்களில் பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தியதாகத் தெரிவித்தார். மேலும், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளிலும் எம்.பில். படிப்பை தொடர்ந்து நடத்த வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.