கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை...! மே 1 முதல் விண்ணப்பம்...!! 

 கலைக் கல்லூரி மாணவர் சேர்க்கை...! மே 1 முதல் விண்ணப்பம்...!! 
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மே 1ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கப்பட உள்ளது.

தமிழகத்தில் மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று நிறைவடைந்தது. பொதுத்தேர்வு முடிவுகள் வரும் எட்டாம் தேதி வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதனிடையே வரும் கல்வியாண்டிற்கான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 633 தனியார் சுயநிதிகலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் வரும் மே 1ம் தேதி முதல் சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தொடங்கப்பட உள்ளது.
 
இதற்காக, மாணவர்கள் ஆன்லைன் மூலமாக தங்களுடைய விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 8-ம் தேதி பொதுத்தேர்வுகள் முடிவுகள் வெளியான பின்பு உரிய மதிப்பெண் சான்றிதழ்களுடன் மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என தனியார் கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளை பொறுத்த வரை பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ஆம் தேதி வெளியிடப்பட்ட பின்னர் மே 9ஆம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என உயர் கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் மே 9ம் தேதி முதல் விண்ணப்ப விநியோகம் துவங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com