10ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாற்று திறனாளி மாணவருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை எழுத 4 லட்சத்து 74 ஆயிரத்து 543 மாணவர்கள், 4 லட்சத்து 63 ஆயிரத்து 522 மாணவிகள், இரண்டு திருநங்கைகள் என மொத்தம் 9 லட்சத்து 38 ஆயிரத்து 67 பேர் தேர்வு எழுதிய நிலையில், நேற்று காலை தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி இரண்டு கைகளை இழந்த சிறுவன் தன்னம்பிக்கையுடன் போராடி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 437 மதிப்பெண் எடுத்து பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இதை அப்பகுதியை சேர்ந்த மக்களை நெகிழச் செய்தது. இந்த செய்தியை அறிந்து மாணவனிடம் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் போன் மூலம் தொடர்புக்கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தார். மேலும் மாணவனின் தாயிடம் அவர் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
மேலும் மாணவனின் படிப்பு மற்றும் அனைத்து அடுத்த கட்ட முயற்சிகளுக்கும் சிவகார்த்திகேயன் உதவி செய்வதாக தெரிவித்தார். மேலும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலிடன் கோரிக்கை வைத்து மாணவருக்கு செயற்கை கைகள் பொருத்த ஏற்பாடு செய்யவதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: