பள்ளிகள் திறக்கப்பட்ட உடன், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு மீண்டும் ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கபட உள்ளன. இந்நிலையில் 9-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்விதுறை உத்தரவிட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை, இடைநிற்றலைக் கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுத்தல், துணைத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்குதல், நான் முதல்வன் திட்டத்தை செயல்படுத்துதல், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை தொடருதல் உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் கற்றல்-கற்பித்தல் பணிகளை தொடர வேண்டும் எனவும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குநர் உத்தவிட்டுள்ளார்.
இதையும் படிக்க:அடுத்தக்கட்ட ஆளுமைகள்!