" தேசிய கல்விக் கொள்கை, மாநில கல்வி கொள்கை என எங்களுக்கு எதுவும் இல்லை " - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்.

" தேசிய கல்விக் கொள்கை, மாநில கல்வி கொள்கை என  எங்களுக்கு எதுவும் இல்லை "  - அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ்.

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்திய அளவில்  சிறந்த கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 18-வது இடம் பிடித்தது குறித்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் :

அப்போது பேசிய அவர் :-

அண்ணா பல்கலை கழகம் நான்கு தரவரிசைகளில்  முன்னேறி உள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்கலை கழகம் நன்றாக முன்னேறி உள்ளது.பல்கலை கழகம் மற்றும் இனிஜினிரிங் துறைகளில் நல்ல முறையில் முன்னேறி உள்ளது.

கடைந்த இரண்டு ஆண்டுகளில் புதிய 15 ரிசர்ச் சென்டர் தொடங்கியுள்ளதாகவும் தரமான கல்வி வழங்கினால் எந்த கல்லூரி வேண்டுமானும் முன்னேற்றம்  அடையும் எனவும் அவர் தெரிவித்தார். 

கடந்த இரண்டு ஆண்டுகளாக திறமைக்கு ஏற்றவாறு தான் கல்விகளை வழங்கி வருகிறோம்.அடுத்த கட்ட  நடவடிக்கை இந்திய அளவில் மட்டும் மின்றி உலகளவில் முன்னேற்றம் அடைய நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் கூறினார்.

கடந்த 2017 - 2018 ஆண்டுகளில் சரியான மேற்பார்வை இல்லாத காரணத்தினாலே ராங்கில் பின் தங்கியதற்கு காரணம் என்றும், தற்போது பொருளியல் படிப்பில் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர் எனவும்,சென்னை அண்ணா பல்கலை கழகம் சிறந்த தரம் வாய்ந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், நிறுவனத்தின் தொடர்ச்சியான முன்னேற்றத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளது எனவும், தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தில் மூலம் நல்ல முன்னேற்றம் மாணவர்களுக்காக அமைகிறது. தமிழக அரசு நல்ல முறையில் ஒத்துழைப்பு அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

" நான் முதல்வன் திட்டம் மூலம் புதிய படிப்புகளை மாணவர்களுக்கு சேர்த்து வழங்கி வருகிறோம். தேசிய கல்விக் கொள்கை மாநில கல்வி கொள்கை என எங்களுக்கு எதுவும் இல்லை நாங்கள் எங்களுக்கு எது தேவையோ அதனை தேர்ந்தெடுத்து மாணவர்களுக்கு  கற்றுத் தருகிறோம்"  என அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com