“ஹலமதி ஹபிபோ“ பாடலுக்கு வேற லெவல்ல குத்தாட்டம் போட்ட 3 குயின்ஸ்!! வைரலாகும் வீடியோ..

அரபிக்குத்துப் பாடலுக்கு மாஸ் நடனம் ஆடிய 3 குயின் நடிகைகள்...
“ஹலமதி ஹபிபோ“ பாடலுக்கு வேற லெவல்ல குத்தாட்டம் போட்ட 3 குயின்ஸ்!! வைரலாகும் வீடியோ..
Published on
Updated on
2 min read

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் “பீஸ்ட்”. இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்றே சொல்லலாம். 

இதற்கிடையில் இந்தப் படத்திலிருந்து வெளியான முதல் லிரிக்கல் பாடலான “ஹலமதி ஹபிபோ“ பாடலுக்கு சாதாரண ரசிகர்கள் முதல் பெரிய பிரபலங்கள் வரை தங்களது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு சமூகவலைத் தளங்களையே அலற விடுகின்றனர். அந்த அளவிற்கு அரபிக்குத்துப் பாடல் ரசிகர்களிடையே ஏகபோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்தப்பாடலுக்கு பாலிவுட்டின் முன்னணி நடிகையான  ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகை ஷில்பா ஷெட்டி மூவரும் இணைந்து அரபிக்குத்துப் பாடலுக்கு பாடலுக்கு படு ஸ்டைலான நடனத்தை ஆடியுள்ளனர்.

பாலிவுட்டில் தனியார் தொலைக்காட்சியில்  ஒளிப்பரப்பாகிவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஷில்பா ஷெட்டி நடுவராக இருந்து வருகிறார். இந்த சூழ்நிலையில்  அந்த நிகழ்ச்சிக்கு ஜாக்குலின் பெர்னாண்ட்ஸ், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகிய மூவரும் விருந்தினர்களாக வந்துள்ளனர். அப்போது அரபிக்குத்துப் பாடலுக்கு 3 பாலிவுட் நடிகைகளும் நடனம் ஆடி ரசகிர்களை மிரள வைத்திருக்கின்றனர். தற்போது இவர்களின் அரபிகுத்துப்பாடல் டான்ஸ் வீடியோ தான் இணையத்தையே கலக்கி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com