4 கோடி ரூபாய் சம்பள பாக்கி.. கோர்ட்டுக்கு போன சிவகார்த்திகேயன்.. எந்த படத்திற்கு?.. யார் தர வேண்டும்? பரபரப்பான கோலிவுட்!!

4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை தர வேண்டும் என தயாரிப்பாளர் ஒருவருக்கு எதிராக சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

4 கோடி ரூபாய் சம்பள பாக்கி.. கோர்ட்டுக்கு போன சிவகார்த்திகேயன்.. எந்த படத்திற்கு?.. யார் தர வேண்டும்? பரபரப்பான கோலிவுட்!!

பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி, பின்னர் ஹீரோவாக மாறியவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய காமெடி வசனங்கள் மூலம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தன் வசம் இழுத்துவிட்டார். குறிப்பாக சிறுவர் சிறுமிகளை தன்னுடைய ரசிகர்களாக ஆக்கிக்கொண்ட சிவா தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர். தற்போது, சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் “SK 20” படத்தின் படப்பிடிப்பு, மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன், திடீரென தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிரான சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அதில், தனது நடிப்பில் வெளியான "மிஸ்டர் லோக்கல்" படத்திற்காக, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒப்பந்தம் போட்டு 15 கோடி சம்பளம் பேசியதாக குறிப்பிட்டார். ஆனால், இதுவரை 11 கோடி ரூபாய் மட்டுமே தந்ததாகவும், பாக்கி 4 கோடி ரூபாய் இன்னும் தரவில்லை என்று கூறியுள்ளார்.

தயாரிப்பாளர் ₹11 கோடிக்கு டிடிஎஸ் செலுத்தத் தவறியதால், 2019-20 மற்றும் 2020-21 ஆண்டுக்கான டிடிஎஸ் தொடை ₹91 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்று தனக்கு நோட்டிஸ் வந்ததை தொடர்ந்த்து.. இந்த வழக்கை தொடர்ந்தாகவும் அந்த மனுவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே மீதமுள்ள 4 கோடி ரூபாய் சம்பள பாக்கியை வழங்கவும், வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவும் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு உத்தரவு விட வேண்டும் என அந்த மனுவில் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை நாளை மறுநாள் மார்ச் 31-ம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் ஒத்திவைத்தார். சம்பள பாக்கி கேட்டு சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.