திரைப்பட பின்னணி பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை போனது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை ஆழ்வார்ப்பேட்டை அபிராமபுரம் பகுதியில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் யேசுதாசின் மகன், விஜய் யேசுதாஸ் வசித்து வருகிறார். இந்நிலையில், வீட்டில் வைத்திருந்த 60 சவரன் தங்க நகை மற்றும் வைர நகைகளை காணவில்லை என யேசுதாசின் மனைவி தர்சனா அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையும் படிக்க : கோவை குடிநீர் பஞ்சத்திற்கு விரைவில் தீர்வு - கே.என்.நேரு!
லாக்கரில் இருந்த நகைகள் மாயமானது தொடர்பாக தங்கள் வீட்டில் வேலை செய்து வரும் நபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக தர்ஷனா தெரிவித்ததன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.