700 கோடி... சீக்கிரம் 1000 கோடி.. ஆர்ஆர்ஆர் படைக்கும் மெகா சாதனை.. வியந்து போன திரையுலகம்!!

700 கோடி... சீக்கிரம் 1000 கோடி.. ஆர்ஆர்ஆர் படைக்கும் மெகா சாதனை.. வியந்து போன திரையுலகம்!!

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான படம் ஆர்ஆர்ஆர். இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துட்டு வருகிறது.

இந்த படம் 700 கோடி வசூலை தாண்டி விட்டதாகவும், விரைவில் 1000 கோடி வசூலை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்திய திரையுலகினர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அதில், இந்தியாவில் மட்டும் 560 கோடி வசூல் செய்துள்ளதாகவும் பாகுபலி 2 படத்துக்கு அடுத்த படியாக இந்த படம் மிக பெரிய வசூலை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் இந்தியில் மட்டும் 131 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது. பாலிவுட் ஒரிஜினல் படங்களை விட ஒரு டப்பிங் படம் அதிக வசூலை பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளார்.

இந்நிலையில், உலகம் முழுவதும் வெளியாகி ரூ.710 கோடி வசூல் செய்த நிலையிலும் இன்னும் உலகம் முழுவதும் பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால் இப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.