14 நாள் படப்பிடிப்பில் உருவான கொன்றால் பாவம் இசை வெளியீட்டு விழா!!!!

14 நாள் படப்பிடிப்பில் உருவான கொன்றால் பாவம் இசை வெளியீட்டு விழா!!!!

கொன்றால் பாவம் படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையிலுள்ள பிரசாந்த் ஸ்டியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய பலரும் கலந்துக்கொண்டும் குறிப்பாக இதில் நடிகை வரலட்சுமி சரத்குமார், இசையமைப்பாளர் சாம் சி எஸ், சரத்குமார், சார்லி, சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read all Latest Updates on and about கொன்றால் பாவம் திரைப்படம்

நடிகர் சரத்குமார் பேசியது: 

கலை உலகிற்கு வர கூடாது என நான் நினைக்கவில்லை

கொன்றால் பாவம் இந்த தலைப்பே வித்தியாசமாக உள்ளது. இந்த டிரெய்லர் பார்த்த உடனே இது மனதை ஈர்க்கும் விதத்தில் உள்ளது. அண்மையில் நான் எந்த இசை வெளியீட்டு விழாவிற்கு செல்வதில்லை. நான் வருவது ஒரு காரணம் நான் அது வேறு விதமாக மாறுகிறது. 

வரலட்சுமி தான் என்னை அழைத்தார். 14 நாட்களில் படபிடிப்பு நிறைவு பெற்றது மிக சிறப்பு. தயாளன் அவர்களுக்கு வாழ்த்துகள். 14 நாட்களில் படபிடிப்பு முடித்துள்ளது ஆச்சரியமாக உள்ளது. அதிலும் இந்த கால கட்டத்தில் முடித்தது தான். இப்போது எல்லாம் பேசவே பயமாக தான் உள்ளது. மேடையில் அனைவரையும் கிண்டல் செய்த சரத்குமார் விழுந்து விழுந்து சிரித்த வரலட்சுமி சரத்குமார். 

சரத்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்: உடலைப் பேணி உழைப்பால் உயர்ந்தவர் |  sarathkumar birthday special - hindutamil.in

வரலட்சுமி இன்று சிறந்த நடிகராக வளம் வந்து கொண்டுள்ளார் என்றால் அதற்கு வரலட்சுமி தான் காரணம். ஏனென்றால் நான் சினிமாவிற்கு வர கூடாது என்று நினைத்தேன். கலை உலகிற்கு வர கூடாது என நான் நினைக்கவில்லை. ஒரு படம் ஒரு படம் என சுயம்பாக வெற்றி பெற்றுள்ளார். விஜயசாந்தி என்று சொன்னார்கள், உண்மையில் அவர் விஜயசாந்தி தான். 

வாழ்க்கையிலும் ஆக்க்ஷன் பண்ணுகிறார். சினிமாவிலும் பண்ணுகிறார். எல்லாம் இருந்தும் அவர் சுயமாக வந்துள்ளார். வாழக்கையில் எந்த பிரச்சனை வந்தாலும் அதை தனியாக சமாளிப்பார். 

ஓடும் படம் தான் பெரிய படம்

வீரசிம்மா ரெட்டி படத்தின் சில காட்சிகளை பாலகிருஷ்ணா எனக்கு காட்டினர். வரலட்சுமி அதில் நடித்துள்ளார் என்று எனக்கு தெரியும். ஆனால் ஒரு நடிகரும் இயக்குனரும் படம் வெளியீடு முன்பே அதை எனக்கு காட்டினர். அதை பார்த்த உடனே நான் அழுது விட்டேன். பெரிய படம் சிறிய படம் என்று எதுவும் இல்லை. ஓடும் படம் தான் பெரிய படம். கமெண்ட் பற்றி கவலை பட தேவையில்லை. 

ரசிகர்கள் கருத்து தான் முக்கியம். சூரியவம்சம் படத்தை பார்த்து மிகப்பெரிய இயக்குனர் என படம் எடுத்து வைத்துள்ளீர்கள் என்று கேட்டார். ஆனால் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் ரசிகர்கள் கருத்து தான் மிகவும் முக்கியம். நாம் நம்மை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் போதை பொருளுக்கு அடிமையாகாமல் இந்த உலகம் சிறப்பாக இருக்க வேண்டும் எனவும் பேசி முடித்தார்


நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசியது 

எனக்கு மனசுக்கு பிடித்த படம்:

தமிழில் ரொம்ப நாள் கழித்து ஒரு திருப்தி கிடைத்துள்ளது இந்த படம் மூலம். கதை தான் இந்த படத்தில் எல்லாமே. வாழ்க்கையில் முதல் முறையாக நான் கேட்காமலே சம்பளம் கொடுத்தது இந்த தயாரிப்பு நிறுவனம் தான். 

வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய படம் 'கொன்றால் பாவம்'..! |  Tamil2daynews

முதல் நாள் சற்று பயமாக இருந்தது. அதன் பிறகு அது மாறியது. ஒரு காட்சியை பல முறை எடுக்கும் போது சில நேரம் சோர்வு ஆகலாம். ஆனால் இயக்குனர் வேண்டும் என்ற காட்சிகளை மட்டுமே எடுப்பார். எனக்கு மனசுக்கு பிடித்த படம் என்றால் அது கொன்றால் பாவம் தான். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. என்னுடைய அடுத்த படமும் தயால் உடன் முடித்து விட்டேன். சின்ன படம் பெரிய படம் கிடையாது. ஆனால் சின்ன படமாக இருந்தாலும் இதை கொஞ்சம் புரோமோட் பண்ணுங்க. எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. சரத்குமார் இரத்தத்தில் இருந்து நான் வந்துள்ளேன் என நெகிழ்ச்சி பொங்க பேசி முடித்தார்.