ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட படப்பிடிப்பு அரங்கு! எங்கு தெரியுமா?

ஹாலிவுட் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய பிரம்மாண்ட படப்பிடிப்பு அரங்கு! எங்கு தெரியுமா?
Published on
Updated on
1 min read

இந்தியாவில் முதன்முறையாக ஹாலிவுட் தரத்தில் அதிநவீன மெய்நிகர் தொழில் நுட்பத்துடன் கூடிய பிரமாண்ட  படப்பிடிப்பு அரங்கு சென்னை பூந்தமல்லியில் அமைக்கப்பட்டுள்ளது.

13 ஆயிரம் சதுர அடியில் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த அரங்கில் 60 அடி நீளமும், 18 அடி உயரமும் கொண்ட அதிநவீன மெய்நிகர் திரை அமைக்கப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டிற்கு எப்போதும் தயாராக இருக்கும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

உலகின் எந்த மூலையில் இருக்கும் இடங்களையும் இந்த மெய்நிகர் திரையில் கொண்டுவர முடியும் என்றும் இந்த அரங்கில் எடுக்கப்படும் காட்சிகளை CGI செய்யவேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்படுகிறது. திரைத்துறையை சேர்ந்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் இங்கு வந்து படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com