மகள் வயது நடிகையுடன் உல்லாச வாழ்க்கை... 2 வது மனைவியையும் விவாகரத்து செய்த ஆமிர் கான்!!

மகள் வயது நடிகையுடன் உல்லாச வாழ்க்கை... 2 வது மனைவியையும் விவாகரத்து செய்த ஆமிர் கான்!!

பாலிவுட் சினிமாவின் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகர்களுள் ஒருவராக ஆமிர் கான் இருந்து வருகிறார் படத்துக்கு படம் வித்யாசங்களை காட்டி உலக அளவில் தனக்கான தனி ரசிகர்களை கூட்டத்தையே வைத்துள்ளார். நடிகர், பாடகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர். பிலிம் ஃபேர் விருதுகள், தேசிய விருதுகள், பத்மஸ்ரீ விருதுகள், பத்ம பூஷன் என இவர் பெற்ற விருதுகளை அடுக்கி கொண்டே போகலாம் ஒருமுறை ஆஸ்கார் விருதுக்கும் கூட இவரின் லகான் படம் பரிந்துரை செய்யப்பட்டது.

மசாலா படமானாலும் சரி கருத்துமிக்க விருதுக்கான படமானாலும் சரி தன்னுடைய அர்ப்பணிப்பை முழுமையாக கொடுக்கக்கூடிய சினிமா மீது அளவுக்கு அதிகமான பற்றுகொண்டுள்ள ஒரு நடிகர் என்பதினாலேயே மக்கள் மத்தியில் மட்டுமின்றி இந்திய சினிஉலக பிரபலங்கள் மத்தியிலும் அவருக்கு அதிக அளவிலான மரியாதையை உண்டு அனால் இந்த மரியாதையை வைத்து கொண்டு இவர் பலரின் திருமண வாழ்வில் நாரதர் வேலை பார்த்துக்கொண்டு இருக்கிறார் என திரைப்பட நடிகையான கங்கனா ரணாவத் இவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் சமீபத்தில் விவாகரத்தான பிரபல ஜோடிகளான சமந்தா மற்றும் நாகசைதன்யா விவாகரத்திற்கு முக்கிய காரணமும் இவர்தான் என்றும் இவரை சாடியுள்ளார்.

1986ஆம் ஆண்டு ஆமிர் கான் ரீனா தத்தா என்பவரை  திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஜுனைத் என்ற மகனும் ஐரா என்ற மகளும் பிறந்தனர் சீராக சென்றுகொண்டிருந்த அவர்களின் வாழ்க்கையில் விரிசல் ஏற்படத் தொடங்கியது லகான் திரைப்படத்தின் போதுதான். இந்த படத்தை தயாரித்தது அவரின் மனைவி  ரீனா தத்தா. இப்படம் சிறந்த அளவில் வரவேண்டும் என்பதற்காக தனது முழு பங்களிப்பையும் கொடுத்து இயங்கி வந்த போதுதான் அதில் உதவி இயக்குனராக பணியாற்றிய கிரண் ராவுடன் ஆமிர் கானுக்கு காதல் மலர்ந்தது இதையடுத்து 2002ஆம் ஆண்டு தனது முதல் மனைவியுடனான உறவை முறித்து கொண்டு அவர்களின் குழந்தைகளான மகன் ஜுனைத்தையும்  மகள் ஐரா வையும் தாயிடமே ஒப்படைத்துவிட்டு தனது வாழ்க்கையின் இரண்டாம் இன்னிங்க்ஸுக்கு தொடங்கினர் ஆமிர்கான்.

2005ஆம் ஆண்டு கிரண் ராவ்விற்கும் ஆமிர்கானுக்கும் திருமணம் நடந்தேறியது பின்னர் இருவரும் 2007 ஆம் ஆண்டு வாடகை தாய் மூலம் ஆண் குழந்தையை பெற்றுக்கொண்டனர். அந்த குழந்தைக்கு ஆசாத் கான் என பெயரிட்டு அன்புடன் வளர்த்து வந்தனர் அதன் பிறகு வந்த ஆமிர்கான் படங்கள் உலகளவிலான அங்கீகாரத்தை பெற தொடங்கியது அதற்கு ஒரு முக்கிய காரணம் அவரின் மனைவியும் அவருடன் இணைந்து கதையை கேட்டு தேர்வு செய்வதே என்றனர். இருபது வருடங்குளுக்கு மேலான அவர்களின் காதல் வாழ்க்கை கடந்த ஜூலை மாதம் முடிவிற்கு வந்தது.

இதுதொடர்பாக இருவரும் வெளியிட்ட அறிக்கையில் அவர்களது மகன் ஆசாத் கான் இருவருடனும் இருப்பார் என்றும் நாங்கள் இருவரும் முழுமனதுடன் எங்கள் திருமண வாழ்க்கையில் இருந்து விலகுகிறோமே தவிர நண்பர்களாக நாங்கள் என்றுமே இணைத்திருப்போம் என்று தெரிவித்தனர் 
இதனிடையே ஆமிர் கான் திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிய தங்கல் படத்தில் அவருக்கு மகளாக நடித்த ஃபாத்திமா சனா ஷேய்க் உடனான புதிய காதலே காரணம் என கூறப்பட்டது ஆனால் நடிகை ஃபாத்திமா சனா ஷேய்க்கோ அல்லது ஆமிர் கானோ இந்த தகவல் குறித்து இதுவரை எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்க வில்லை இதனால் இத்தகவல் உண்மைத்தண்மை மிக்கது என்று நெட்டிசன்கள் கிசுகிசுத்து வருகின்றனர். 

இந்நிலையில் ஆமிர் கான் நடித்து வரும் லால் சிங் சதா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இதனைதொடந்து இப்படத்திற்கு பிறகு ஆமிர் கான் நடிகை ஃபாத்திமா சனா ஷேய்க்கை மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர் ஆனால் இந்த செய்தியில் எந்த அளவுக்கு உண்மை தன்மை உள்ளது என்பதை லால் சிங் சதா படம் வெளியான பிறகுதான் தெரியவரும்.