ஒரு நாள் முதல்வனின் 60வது பிறந்தநாள் இன்று!
நாட்டுப் பற்றுக் கொண்ட இந்திய நடிகர்களில் முதன்மை வகிக்கும் அர்ஜுன் சார்ஜாவின் 60 வது பிறந்தநாள் இன்று!

நாட்டுப் பற்று நிறைந்தவர்கள் பலர். ஆனால், அனைவரது மனதில் எடுத்துக் காட்டாக நிலைத்து நிற்கும் பற்றாளர் ஒரு சிலரே. அந்த வகையில், என்றும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கும் ஒரு நடிகர் யார் என்றால்ம் அது அர்ஜுன் தான். அவரது தேசப்பற்று எந்தளவு என்று கேட்டால், இந்தியா சுதந்திரம் அடைந்த அதே நாளில் தனது பிறந்தநாளையும் கொண்டாடுகிறார் என்றால் பாருங்கள்.
இது வரை 150 படங்களுக்கும் மேல் நடித்திருக்கும் அர்ஜுன் படங்களில், வழக்கமான ஹீரோக்களுக்கு தேவையான காதல், குடும்ப செண்டிமெண்ட் போன்றவை தாண்டி, மக்கள் நலம், தேசப்பற்று ஆகியவையும் நிரைந்திருக்கும். ஆக்ஷன் கிங் என்று ரசிகர்களால் ஆசையாக அழைக்கப்படும் அர்ஜுன், முதன் முதலில் தமிழ் திரையுலகிற்கு காலெடுத்து வைத்தது ‘நன்றி’ என்ற படம் மூலமாகத் தான்.
கன்னடத்தில் இருந்து வந்த இவரது தமிழ் வித்தியாசமாக இருந்தாலும், பலரால் ரசிக்கப்பட்டது. அவரது உடலமைப்பு, உடல்கட்டு அனைத்தும் பலரால் ரசிக்கப்பட்டது. ஆனால், அவற்றையெல்லாம் தாண்டி, அவர் ரசிகர்களை குவித்தது, தேசப்பற்று படங்கள் மூலமாகத் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கிய ஜெண்டில்மேன் திரைப்படம் மூலம், தான் ஒரு கமெசியல் ஹீரோ தான் என நிரூபித்தார். தொடர்ந்து பல படங்கள் ஆக்ஷன் ஹீரோவாகக் கொடுத்து, இந்திய அளவில் பார்வைப் பெற்றது, அதே ஷங்கர் இயக்கத்தில் வந்த ‘முதல்வன்’ படம் தான். ஒரு நாள் முதல்வன் என்ற கதைகளம், மிகவும் வித்தியாசமாக பலராலும் வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது ரசிகர் கூட்டம் அதிகரித்தது என்றே சொல்லலாம்.
1981இல் தனது சினிமா பயணத்தைத் தொடங்கிய அர்ஜுன், தனது தேசப்பற்றை, சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுத்தியிருக்கிறார். தனது கையில், தேசியக்கொடியை பச்சைக் குத்தியிருக்கிறார் ஆக்ஷன் கிங் அர்ஜுன். இன்று தனது 60வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
HAPPY BIRTHDAY ARJUN SARJA @akarjunofficial |#HappyBirthdayArjun | #Actor | #Malaimurasu | pic.twitter.com/qxipvXWZnL
— Malaimurasu TV (@MalaimurasuTv) August 15, 2022