’ரோலக்ஸ்’ கேரக்டரை பார்க்கும் போது பயமாக தான் இருக்கு - ட்விட்டரில் பதிவு செய்த நடிகர் கார்த்திக்.!

விக்ரம் படத்தில் நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்து நடிகர் கார்த்திக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’ரோலக்ஸ்’ கேரக்டரை பார்க்கும் போது பயமாக தான் இருக்கு - ட்விட்டரில் பதிவு செய்த நடிகர் கார்த்திக்.!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத்தின் மாஸான இசையில் உருவாகி கடந்த ஜீன் 3 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விக்ரம்’. கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா என பல முன்னணி ஹீரோக்களின் அட்டகாசமான நடிப்பில் வெளியான இப்படம், மாபெரும் வெற்றியை ஈட்டி வருகிறது. அதிலும் குறிப்பாக இந்தப்படத்தின் கடைசி ஐந்து நிமிடங்களில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான தரமான வில்லனாக தோற்றமளித்த நடிகர் சூர்யா தன்னுடைய நடிப்பால் அனைவரின் கைத்தட்டல்களையும் வாங்கிவிட்டார். அதுமட்டுமில்லாமல் அடுத்த பாகத்தில் அவர்தான் மெயின் வில்லன் என்பது அதிலிருந்தே உறுதியானது.

இந்நிலையில் அண்ணனுன், நடிகருமான நடிகர் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் குறித்தும், ‘விக்ரம்’ படம் குறித்து நடிகர் கார்த்திக் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், விக்ரம் திரைப்படம் அனைவரும் குறிப்பிட்டதுபோல் கமல்ஹாசன் அவர்களின் உண்மையான கொண்டாட்டம் தான்.... அவரை திரையில் பார்த்தது பிரமிப்பாக இருந்தது. ஆக்ஷனும் காட்சியமைப்பும் சுவராசியமான தொடர்பு கொண்டதாகவும் ஆச்சரியங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. பகத் பாசில் தனது தீவிரமான நடிப்பை ஒருபோதும் கைவிட வில்லை என்று கூறியுள்ளார்.

மேலும், விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் புதிய பக்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். பின்னணி இசையில் மிரட்டியிருக்கும் அனிருத்....ஆபத்தான காட்சிகளை மிகப் பெரியதாகவும், காப்பவர்களை சக்தி வாய்ந்தவர்களாகவும் காட்டியிருக்கிறார். இறுதியாக ரோலக்ஸ் சாரை பார்க்கும் போது பயமாக இருந்தது. அத்துடன் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களின் உற்சாகத்தை முழுமையாக பார்வையாளர்களுக்கு பகிர்ந்துள்ளார் என்று கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.