’இரவின் நிழல்’ படத்தின் டீசர் நிகழ்ச்சியில்...திடீரென மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்...! அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான்!!

’இரவின் நிழல்’ படத்தின் சிங்கிள் டிராக்கை வெளியிடும் நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் கோபத்துடன் மைக்கை தூக்கி எறிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
’இரவின் நிழல்’ படத்தின் டீசர் நிகழ்ச்சியில்...திடீரென மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்...! அதிர்ச்சியில் உறைந்த ஏ.ஆர்.ரகுமான்!!
Published on
Updated on
1 min read

தமிழ் திரையுலகின் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன், 1989 ல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதைத்தொடர்ந்து உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை வசனம் போன்ற பல படங்களை இயக்கினார். இவரது படங்கள் தனித்துவமிக்க கதையாக இருப்பதால் இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற திரைப்படம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதை பெற்றது.

இப்படி தனித்துவமிக்க கதையை இயக்கிவரும் இவர் வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைத்து சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். அதன்படி அவர் கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கிய நிலையில், ஒரு சிலர் மட்டும் பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். அவர்களை வைத்து இயக்க தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பை, தற்போது பார்த்திபன் முடித்துவிட்டார். பார்த்திபன் இயக்கிய இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ‘இரவின் நிழல்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. ஏ.ஆர் ரகுமான் உள்பட பலரும் கலந்துக்கொண்ட இவ்விழாவில் பார்த்திபனுக்கும் ஏ.ஆர் ரகுமானுக்கும் இடையே உரையாடல் நிகழ்வு நடந்தது. அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென வேலை செய்யவில்லை என்பதால், கோபமடைந்த பார்த்திபன் சட்டென்று கையில் இருந்த மைக்கை மேடைக்கு கீழே தூக்கி எறிந்துவிட்டார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மேடையில் இருந்த ஏ.ஆர்.ரகுமான் பார்த்திபன் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அதன்பின் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன் அங்கு நடந்த அந்த நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும், தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இருப்பினும், ஏ.ஆர்.ரகுமான் முன் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com