மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்...!

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவாக, நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது அறக்கட்டளை சார்பாக ஏழை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸை வழங்கியுள்ளார்.
மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பிரகாஷ் ராஜ்...!
Published on
Updated on
1 min read

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவாக, நடிகர் பிரகாஷ் ராஜ் அவரது அறக்கட்டளை சார்பாக ஏழை மக்களுக்கு இலவச ஆம்புலன்ஸை  வழங்கியுள்ளார். 

கன்னட திரையுலகில் தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் நடிகர் புனித் ராஜ்குமார். நடிப்பையும் தாண்டி ஏழை எளியவர்களுக்கு பல விதமான உதவிகளை செய்துள்ளார். மேலும் பல குழந்தைகளின் கல்விக்கும் வித்திட்டவர். இப்படியான மனிதர், தனது 46 வது வயதில், தீடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உயிரிழந்தார். இவரது இழப்பு திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியது. 

மேலும் சில தினங்களுக்கு, முன்பாக அவரை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருது புனீத் ராஜ்குமாருக்கு வழங்கப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் நினைவாக,  நடிகர் பிரகாஷ் ராஜ், அவரது அறக்கட்டளை சார்பாக, ஏழை மக்களுக்கு உதவும் வகையில் இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், " 'அப்பு எக்ஸ்பிரஸ்'  எங்கள் அன்பான புனீத்ராஜ்குமாரின் நினைவாக ஆதரவற்றவர்களுக்கு பிரகாஷ்ராஜ் அறக்கட்டளை சார்பாக இலவச ஆம்புலன்ஸ் வழங்கபட்டது " என பதிவிட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com