நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நடிப்பையும் தாண்டி இந்த விஷயம் ரொம்ப பிடிக்குமாம்..! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மே 13ம் தேதி டான் திரைப்படம் வெளியானது. ஒரு பேட்டியில் தனக்கு நடிப்பையும் தாண்டி இந்த விஷயம் பிடிக்கும் என கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு  நடிப்பையும் தாண்டி இந்த விஷயம் ரொம்ப பிடிக்குமாம்..! என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ!

லைக்கா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அறிமுக இயக்குனரான சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் உருவானது டான். இதில் பிரியங்கா அருள்மோகன், எஸ் ஜே சூரியா, சிவாங்கி, ஆர் ஜே விஜய், சூரி, சமுத்திரக்கனி, பால சரவணன், ராஜு ஜெயமோகன் , ஷாரிக் போன்ற பலர் நடித்திருகின்றனர். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரெயிலர் மே 6ம் தேதி வெளியானது. வெளியான ஒரு மணி நேரத்திலேயே, யூடியூப்பில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றது. அனிருத்  இசை அமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆனது. காதல், காமெடி, அப்பா செண்டிமெண்ட் என கலவையாக உருவாகியுள்ளது.  

ஒரு இன்ஜினியரிங் கல்லூரியின் லாஸ்ட் பெஞ்ச் ஸ்டுடென்ட்டாக இருக்கும் சிவகார்த்திகேயன் கடும் கோபத்தை கொண்ட தந்தைக்கு மகனாக வளர்கிறார். கல்லூரியில் பெரும் அட்டகாசம் செய்யும் குறும்புக்கார மாணவனாக நடித்துள்ளார். மேலும் கல்லூரி மாணவராக மட்டுமில்லாமல் பள்ளி மாணவராகவும் நடித்துள்ளார். மகன் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக மிகுந்த பாசம் நிறைந்த அப்பா- கண்டிப்போடு வளர்க்கப்படும் மகன் இருவருக்கும் இடையில் நடப்பது தான் படத்தின் கதை கரு. அப்பா கதாபாத்திரத்தில் நடித்த சமுத்திரக்கனியின் யதார்த்த நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. 

இந்நிலையில் சோனி ம்யூசிக்கின் ஜஸ்ட் எ மினுத்தில் பேசிய sk பல தகவல்களை பகிர்ந்துகொண்டார்.  அதில் தன்னை போலவே செய்கிறாரே என்று உங்கள் மகளிடமும், மகனிடமும் பார்த்த விஷயம் என்ன என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு சிரிப்பு என பதிலளித்த அவர், நடிப்பு, பாட்டு, பாடலாசிரியர், நடனம் , தொகுப்பாளர் என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ரசிகர்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் முக்கியம் என்றும் கொஞ்சம் கூடுதலாக anchoring பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும், தன்னுடைய நாள் மொபைல் போனில் துவங்கி மொபைல் போனிலேயே முடிவதாகவும், பள்ளிக் காலங்களில் தான் இருக்கும் இடமே தெரியாத அளவில்தான் இருந்தேன் என்றும் தனக்கு எந்த அளவில் ஒரு படத்தின் ஸ்கிரிப்ட் பிடிக்கிறது என்பதை பொருத்தே தான் கதைகளை தேர்வு செய்வேன் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.