இருளர் மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் சூர்யா

இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக நடிகர் சூர்யா ரூ. 1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இருளர் மாணவர்களின் கல்விக்காக ரூ.1 கோடி நிதி வழங்கிய நடிகர் சூர்யா
Published on
Updated on
1 min read

த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் 'ஜெய்பீம்' இந்த படம் அமேசான் ப்ரைம் OTT தளத்தில் நாளை (அக்டோபர்-2 ) வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த திரைப்படத்தில் பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்வியல் நெருக்கடிகள் பேசப்பட்டுள்ளன. 

இந்நிலையில் முதல்வரை சந்தித்த படக்குழு இந்தப் படத்தை அவருக்கென்று பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டினர். அதனை கண்டு மகிழ்ந்த முதல்வரும் படக்குழுவினருக்கு அவரது பாராட்டுக்களை தெரிவித்தார்.  

இதனையடுத்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பழங்குடி இருளர் இன மக்களின் நலனுக்காக ஜோதிகா - சூர்யா அவர்களின் 2D  நிறுவனம் சார்பில் ரூ. 1 கோடி வழங்கபட்டது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்தரு மற்றும் பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்க பொறுப்பாளர்கள் பெற்று கொண்டனர். நடிகர் சூர்யாவின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com