ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி...

ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய்  நிதியுதவியை நடிகர் சூர்யா வழங்கினார்.

ராஜாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாளுக்கு நடிகர் சூர்யா ரூ.15 லட்சம் நிதியுதவி...

ஜெய்பீம் திரைப்படத்தில் வரும் உண்மை கதாபாத்திரமான பார்வதிக்கு நடிகர் சூர்யா 15 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என அண்மையில் அறிவித்தார்.அதற்கான காசோலையை இன்று சூர்யா வழங்கினார்.

இந்த நிகழ்வில் பார்வதி மற்றும் அவரது குடும்பத்தினருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நடிகர் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக நடைபெறும் அநீதிகளை தடுக்க தங்களை போன்ற அமைப்புகள் உள்ளது என்பதை ஜெயபீம் திரைப்படம் வெளிப்படுத்தியுள்ளது என்றார்