ரோலக்ஸ் கேரக்டரை அடுத்து இன்னொரு கெட்டப்பை உறுதி செய்த சூர்யா..! வைரலாகும் புகைப்படம்

நடிகர் சூர்யா தான் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் கெட்டப்பை புகைப்படம் மூலம் உறுதி செய்திருக்கிறார்.

ரோலக்ஸ் கேரக்டரை அடுத்து இன்னொரு கெட்டப்பை உறுதி செய்த சூர்யா..! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் சூர்யா, சமீபத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி சாதனை படைத்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கடைசி ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே தோன்றும் நடிகர் சூர்யா, ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் நீண்ட தாடி, Tattos, காதில் கம்பல் என்று பார்ப்பதற்கு ஒரு உண்மையான ரெளடி போலவே கதாபாத்திரத்தில் ஒன்றியிருப்பார். என்னதான் சூர்யா கடைசி 5 நிமிடங்கள் வந்தாலும் அவருடைய கதாபாத்திரம் தூக்கி சாப்பிடுவது போல் இருந்ததால் ரசிகர்கள் அவரை கொண்டாடி வந்தனர். அதுமட்டுமில்லாமல் “விக்ரம்” படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா தான் முதன்மை வில்லனாக இருப்பார் என்பதையும் படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். அதன்படி ரசிகர்கள் அனைவரும் ரோலக்ஸ் கேரக்டரை எப்போ மீண்டும் பார்ப்போம், ‘விக்ரம் 2’ எப்போ வரும் என்று எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூர்யா தனது சமூக வலைதளபக்கத்தில் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அடுத்த படத்தின் கெட்டப்பை உறுதி செய்துள்ளார். அதாவது ’விக்ரம்’ படத்தை அடுத்து இவர் நடிப்பில் வெளியாகி நல்லவரவேற்பை பெற்ற ’சூரரைப்போற்று’ படத்தின் ஹிந்தி ரீமேக் படத்தில் சூர்யா, சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தான் தற்போது சூர்யா புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த புகைப்படத்தில் இருக்கும் கெட்டப்பில் தான் அவர் ‘சூரரைப்போற்று’ படத்தில் தோன்றுகிறார் என்பது உறுதியாகி உள்ளது. மேலும் அக்சயகுமாருடன் இணைந்து நடித்த ஒவ்வொரு காட்சியும் தனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது என்றும், சுதா கொங்கரா ’மாறா’ கேரக்டரை மிகவும் அழகாக மீண்டும் செதுக்கி உள்ளார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.