கல்லூரி மாணவருக்கு நேரடியாக பணம் அனுப்பிய சூர்யா.... காரணம் என்ன

மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவருக்கு புத்தகம் வாங்க, அவரது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பி உதவியுள்ளார் நடிகர் சூர்யா 

 கல்லூரி மாணவருக்கு நேரடியாக பணம் அனுப்பிய சூர்யா.... காரணம் என்ன

நடிகர் சூர்யா குடும்பத்தினர் மக்களுக்கு தங்கள் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து உதவி வருகின்றனர். குறிப்பாக படிப்பிற்காக. அகரம் அறக்கட்டளை மூலம் பல ஆயிரம் மாணவர்கள் படிப்பிற்கு சூர்யா குடும்பத்தினர் உதவியுள்ளனர். முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்குக் கூட சூர்யா குடும்பத்தினர் 1 கோடி ரூபாய் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது திருநெல்வேலியைச் சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவருக்கு புத்தகங்கள் வாங்க, அவரது வங்கி கணக்கில் ரூபாய் 5000 நேரடியாக செலுத்தியுள்ளார் சூர்யா. அவர் பணம் அனுப்பிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய 2D Entertainment நிறுவனம் மூலம் சூர்யா பணம் அனுப்பியுள்ளார். சூர்யா செய்துள்ள இந்த உதவி மாணவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘சூர்யா40’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்க உள்ளார்.