வாழ விடுங்க அஜித்... பெத்தவர்ட்ட பேசுங்க விஜய்... வம்பு வளர்க்கும் ரசிகர்கள்

நடிகர்கள் அஜித், விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மாறி மாறி மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

வாழ விடுங்க அஜித்... பெத்தவர்ட்ட பேசுங்க விஜய்... வம்பு வளர்க்கும் ரசிகர்கள்

கடந்த ஆண்டு மே மாதம் 23-ம் தேதி மருத்துவமனைக்கு பிரபல நடிகர் அஜித்குமார் வருகை தந்தார். மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை சந்திக்க நடிகர் அஜித் வந்துள்ளார்.

மருத்துவமனையில் அஜித்தை வீடியோ எடுத்த விவகாரத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் அஜித் வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்தனர். ‛என் நிலைமைக்கு அஜித் தான் காரணம்' என அப்பெண் குற்றம் சாட்டினார். இதுகுறித்த வீடியோவும் வெளியானது.  

இதை விஜய் ரசிகர்கள், ‛வாழ விடுங்க அஜித்' என்ற தலைப்பில் டுவிட்டரில் டிரெண்ட் ஆக்கினர். இதற்கு பதிலடியாக அஜித் ரசிகர்கள், விஜய் குடும்ப பிரச்னையை கையில் எடுத்தனர். டுவிட்டரில், ‛பெத்தவர்ட்ட பேசுங்க விஜய்' என்ற தலைப்பை டிரெண்ட் செய்தனர். 

தற்கொலை செய்து கொள்ள போவதாக அப்பெண் கதறி கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஷ்டாக் உருவாக்கி விளையாடிக் கொண்டிருகின்றனர்.