பிரம்மாண்ட துர்கா பந்தலில் நடிகை கஜோல் சாமி தரிசனம்.!!

பிரம்மாண்ட துர்கா பந்தலில் நடிகை கஜோல் சாமி தரிசனம்.!!

துர்கா பூஜையை முன்னிட்டு மும்பையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பந்தலில் நடிகைகள் கஜோல் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் ‘சாமி தரிசனம் செய்தனர்.

துர்கா பூஜையை முன்னிட்டு மும்பையில் பல பகுதிகளில் பிரம்மாண்ட பந்தல்கள் அமைக்கப்பட்டு மக்கள் வழிபாடு நடத்தி வருகிறனர்.

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக துர்கா பூஜா கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வடக்கு மும்பையில் அமைக்கப்பட்டுள்ள மிக பிரம்மாண்ட துர்கா பூஜா பந்தலில் நடிகைகள் கஜோல்,சுமோனா சக்கரவர்த்தி, ஷர்பனி முகர்ஜி உள்பட பாலிவுட் பிரபலங்கள் ‘சாமி தரிசனம் செய்தனர்.