கணவர் குறித்து தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் - நடிகை மீனா உருக்கமான பதிவு!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நிலை பாதிப்பால் உயிரிழந்த நிலையில், அவர் இறப்பு குறித்து இணையத்தில் தவறான வதந்திகள் பரவி வருவதால் அதனை கண்டித்து மீனா தனது வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

கணவர் குறித்து தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் - நடிகை மீனா உருக்கமான பதிவு!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மீனாவின், கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28 ஆம் தேதியன்று இரவு காலமானார். 48 வயதாகும் இவருக்கு சில தினங்களுக்கு முன் திடீரென நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நுரையீரலில் தொற்று பாதிப்பு அதிகமானதால், நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்ததால்  உறுப்பை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவருக்கு உறுப்பு கிடைக்காததால், ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து சிகைச்சை பலனின்றி வித்யாசாகர் உயிரிழந்தார்.

ஆனால் வித்யாசாகர் கொரோனாவால் உயிரிழந்தாரா? இல்லை வேறு எதாவது காரணமா என்று அவருடைய மரணம் குறித்து பல்வேறு வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. 

இந்நிலையில், நடிகை மீனா தற்போது தன் கணவர் இறப்பு குறித்து பரவி வரும் வதந்தியை கண்டித்து தனது சமூக வலைதளபக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில், நான் என் கணவரின் இறப்பினால் ஆழ்ந்த சோகத்தில் உள்ளேன். ஊடகத்தினர் இந்த சூழ்நிலையில் எங்கள் தனியுரிமையை மதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இந்த விஷயத்தில் மேலும் தவறான செய்திகளை பரப்புவதை தயவு செய்து நிறுத்துங்கள். இந்த கடினமான சூழலில் என்னுடன் இருந்த நல் உள்ளங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். நடிகை மீனாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.