நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு.. ஆறுதல் தெரிவித்த திரைபிரபலங்கள்!!

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மறைவுக்கு திரைபிரபலங்கள் இறங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு.. ஆறுதல் தெரிவித்த திரைபிரபலங்கள்!!
Published on
Updated on
3 min read

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 48.

சென்னை கோட்டூர்புரத்தில் வசித்துவரும் நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு ஏற்கெனவே நுரையீரல் பாதிப்பு இருந்த நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பும் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்ட அவர், நுரையீரல் பாதிப்பிற்கு தொடர்ந்து சிசிக்சை எடுத்து வந்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வித்தியாசாகர், மேல் சிகிச்சைக்காக அமைந்தரையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நேற்றிரவு 9 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோட்டூர்புரத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு இன்று உடல் கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் வித்யாசாகரின் உடல் தகனம் நடைபெறும் என கூறப்படுகிறது.

தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு திரைப்பிரபலங்கள் இறந்த வித்யாசாகருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனால், #meena என்று ஹாஸ்டக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.. திரை பிரபலங்கள் வெளியிட்ட பதிவை பார்க்கலாம்..

ரஜினிகாந்த்:

மீனாவின் கணவர் இறந்ததற்கு ரஜினிகாந்த் மீனாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த், எங்கையோ கேட்ட குரல் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா.. பின்னர் முத்து, வீரா போன்ற படங்களில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார் மீனா.

சரத்குமார்:

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் இந்த திடீர் மறைவு செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மீனா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள், அவரது ஆத்மா சாந்தியடையட்டும். என சரத் குமார் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரம்பா: 

தனது கணவர் மற்றும் மகள்களுடன் மீனா வீட்டிற்கு நேரடியாக சென்று ஆறுதல் கூறினார் ரம்பா.. பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில்,  மீனாவை இப்படி  பாக்கவே கஷ்ட்டமாக உள்ளது என தெரிவித்தார்.

லட்சுமி:

பிரபல நடிகை லட்சுமி மீனாவின் வீட்டிற்கு சென்று மீனாவுக்கு ஆறுதல் கூறியுள்ளார். வித்யாசாகரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

இயக்குனர் சேரன்:

மீனா நடித்த பாரதி கண்ணம்மா, வெற்றிக்கொடி உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் சேரன், நேரடியாக மீனா வீட்டுக்கு தனது மகன் மற்றும் மனைவியுடன் வந்து ஆறுதல் கூறினார்.

குஷ்பு:

ஒரு மோசமான செய்தியுடன் காலை எழுந்திருக்கிறேன். நடிகை மீனாவின் கணவர் சாகர் நம்மிடையே இல்லை என்பதை அறிந்து மனம் உடைந்தது. நீண்ட நாட்களாக நுரையீரல் நோயால் அவதிப்பட்டு வந்தார். மீனா மற்றும் அவரது மகளை நினைத்து இதயம் கணக்கிறது. வாழ்க்கை கொடுமையானது. துக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் என பதிவிட்டிருந்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com