மீண்டும் அடுத்த நீலாம்பரியாக நடிக்க போகிறாரா ரம்யா கிருஷ்ணன்? அதுவும் ரஜினிகாந்த் படத்துலயா?

படையப்பாவிற்கு பிறகு மீண்டும் ரஜினியுடன் ‘தலைவர் 169’ படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணன் இணைய போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மீண்டும் அடுத்த நீலாம்பரியாக நடிக்க போகிறாரா ரம்யா கிருஷ்ணன்? அதுவும் ரஜினிகாந்த் படத்துலயா?
Published on
Updated on
2 min read

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘படையப்பா’ படத்தில் வில்லியாக அதுவும் ‘நீலாம்பரி’ கேரக்டரில் நடித்து அசத்தியவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அந்த கேரக்டர் தான் இவருக்கு மிகப்பெரிய அளவில் புகழை ஈட்டி தந்தது என்றும் சொல்லலாம். இன்றளவும் அந்த நீலாம்பரி கேரக்டரை மறந்திருக்க முடியாது. 

அதற்கு பிறகு அவருக்கு அமைந்த மிக ஸ்ராங்கான கேரக்டர் எதுவென்றால் அது ”பாகுபலி” சிவகாமி கேரக்டர்தான். இதுவுமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச்சானது. இந்நிலையில் தற்போது ரஜினியின் அடுத்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அடுத்ததாக உருவாகயிருக்கும் திரைப்படம் ‘தலைவர் 169’. இந்த படத்தில் சுமார் 22 ஆண்டுகளுக்கு பிறகு சூப்பர் ஸ்டாருடன் இணையும் ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும், அந்த கேரக்டர் அனேகமாக ’படையப்பா’ நீலாம்பரி கேரக்டர் போல் நெகட்டிவ் கேரக்டர் ஆக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ரம்யா கிருஷ்ணனும் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதால் ‘தலைவர் 169’ படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். மேலும் அனிருத் இசையமைக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜீலை மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com