மாடி தோட்டத்தில் விளைந்த மஞ்சள்...அறுவடை செய்து பொங்கல் கொண்டாடிய ரம்யா பாண்டியன்!!

வீட்டு மாடி தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்து பொங்கல் கொண்டாடிய  நடிகை ரம்யா பாண்டியன்...

மாடி தோட்டத்தில் விளைந்த மஞ்சள்...அறுவடை செய்து பொங்கல் கொண்டாடிய ரம்யா பாண்டியன்!!

ஜோக்கர் படத்தில் நடித்திருந்த ரம்யா பாண்டியனை தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடவில்லை. என்ன செய்வது என யோசித்த ரம்யா பாண்டியன் நடிகைகளின் யுக்தியை கையாண்டார்.  

கேஷுவலாக தனது வீட்டின் மாடியிலிருந்து போட்டோ சூட் ஒன்றை நடத்தினார். அதில் இடுப்பு மடிப்பு தெரிவது போது எடுத்த புகைப்படம் இணையத்தளத்தில் செமயாக வைரலானது. இதில் பிரபலமான ரம்யா பாண்டியன், அதன்பின் ஒரு ரியாலிட்டி ஷோ மூலம் புகழ் பெற்றார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெள்ளித்திரையில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார் ரம்யா பாண்டியன். சமூகவலைத்தளங்கங்கள் படு ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வபோது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருவார். அந்த வகையில் தற்போது தனது வீட்டின் மாடியில் போட்ட தோட்டத்தில் விளைந்த மஞ்சள் அறுவடை செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் பொங்கலை முன்னிட்டு வளமான விளைச்சலைத் தந்த இயற்கை அன்னைக்கு தனது நன்றியை செலுத்தி கொள்வதாகவும் இந்த நன்னாளில் எனது மாடித் தோட்டத்தில் விளைந்த மஞ்சளை அறுவடை செய்ததை அளவற்ற மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன் என்றும் அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் என்றும் ரம்யா பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ரம்யா பாண்டியனின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு கீர்த்தி பாண்டியன் உள்பட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் 'ஆஹா இது ஆச்சரியமாக இருக்கிறது மற்றும் உங்கள் சொந்த அறுவடையை நீங்கள் வைத்திருக்கும் போது அது மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் என்பது உறுதி!! வளர்ந்து கொண்டே இருங்கள்’ என்று கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.