விருது பெற ஓப்பன் கோட் அணிந்து சென்ற நடிகை சமந்தா..!!

ஃபிலிம்பேர் விருதுகள் விழாவில்  சிறந்த  ஒ.டி.டி தள நடிகைக்கான விருதை நடிகை சமந்தா தட்டிச் சென்றுள்ளார்.
விருது பெற ஓப்பன் கோட் அணிந்து சென்ற நடிகை சமந்தா..!!
Published on
Updated on
1 min read

கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் நடிகை சமந்தா.  ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம்  அறிமுகமாகி, பின்னர் ‘பாணாக்காத்தாடி “ படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் நடிகை சமந்தா. இதனைத்தொடர்ந்து, நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம், தீயா வேலை செய்யனும் குமாரு, 24, அஞ்சான், கத்தி, தெறி போன்ற படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்  பிடித்தார்.

இதனையடுத்து, தெலுங்கு பிரபலம் நாகர்ஜூனாவின் மகன் நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் திருமணத்திற்கு பிறகு சமந்தா நடிப்பில் கவனம் செலுத்தமாட்டார் என்று நினைத்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி   நடிக்க தொடங்கினார். அதுமட்டுமில்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்த தொடங்கிய நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 வெப்சீரிஸில் படு கவர்ச்சியாக நடித்திருந்தார். இதற்கு பிறகு நடிகை சமந்தாக்கும் , நாகசைதன்யாவுக்கும்  இடையில் ஏற்பட்ட மனவேறுபாடு காரணமாக தங்களது 4 வருட காதல் திருமணத்தை முடித்துக்கொண்டனர்.

இவர்களின் இந்த முடிவு ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை  ஏற்படுத்தியதால் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும்  பல்வேறு காரணங்களை முன்வைத்து கிசுகிசுக்க தொடங்கினர். ஆனால், கொஞ்சம் கூட மனம் தளராத நடிகை சமந்தா அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் , சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்து ரீலிசுக்காக காத்திருக்கிறார்.

இந்நிலையில்,  2021-ம் ஆண்டுக்கான சிறந்த ஓ.டி.டி.தளத்திற்கான  ஃபிலிம்பேர் விருதுகள்  விழாவில் கலந்துகொண்ட நடிகை சமந்தா,  ஃபேஷன் உடையில் கலக்கியுள்ளார். இந்த விழாவில் சிறந்த  ஒ.டி.டி.தள நடிகைக்கான விருதை தொடர்ந்து 5-வது முறையாக தட்டிச் சென்றுள்ளார்.  விருதுடன் போஸ் கொடுத்த நடிகை சமந்தாவுக்கு  சக நடிகர் நடிகைகள் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com