நடிகை ஷாலு ஷம்முவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம்... ரசிகர்கள் கவலை!!

வருத்தப்படாதா வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த நடிகை ஷாலு ஷம்முவுக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சாம், விரைவில் திருமணமும் நடக்கவுள்ளதாம்.

நடிகை ஷாலு ஷம்முவுக்கு மாப்பிள்ளை பார்த்துட்டாங்களாம்... ரசிகர்கள் கவலை!!

நடிகை ஷாலு ஷம்மு தம்முடைய சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் அவ்வப்போது நேரலையில் பேசிவரும் ஷாலு ஷம்மு இன்ஸ்டாகிராம் வழியே ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து வந்திருந்தார்.  இந்த உரையாடலில், ரசிகர் ஒருவர் திரைத்துறையில் பெண்களுக்கு சினிமாவில் இருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் இருப்பது  உண்மைதானா?

அதற்கு பதிலளித்த ஷாலு ஷம்மு,  “ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தோன்றும் ஒருவரின் முடிவை இன்னொருவர் தலையிட்டு கட்டாய படுத்தவோ, வலியுறுத்தவோ முடியாது. ஒவ்வொருவருக்கும் தங்களுடைய முடிவை எடுப்பதற்கான உரிமை உண்டு! என்று தெரிவித்திருக்கிறார்.

அதன்பின் இன்னொருவர் மிகவும் அநாகரிகமான முறையில் உடல் அங்கங்களை பற்றி கேள்வி எழுப்பினர். இதற்க்கு மற்றொரு ரசிகர் இப்படி சில ரசிகர்கள் கேள்வி எழுப்பும் போது என்ன செய்வீர்கள்?  இதற்க்கு பதிலளித்த ஷாலு ஷம்மு, பொதுவாக இப்படியான கேள்விகளை கேட்பவர்களை கடந்து போய் விடுவதாகவும், ஆனால்  இவர்கள் ஏன் தங்களுடைய சொந்த ஐடி மூலம் வராமல் ஃபேக் ஐடி மூலம் வருகின்றனர் என்பதை தான் முதலில் கேட்பேன் என்று கூறியிருக்கிறார். 

இதேபோல் இன்னொரு ரசிகர் ஒருவர் மாப்பிள்ளை பார்க்கிறார்களா? என்று கேட்டபோது அதற்கு வெட்கத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து ஆமாம் என்று கூறியிருக்கிறார். இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் வெறித்தனமான சில ரசிகர்கள் கவலையில் கமாண்ட் பதிவிட்டு வருகிறார்கள்.