நான்காவது திருமணம் பற்றி உங்ககிட்ட சொல்ல முடியாது... வனிதாவின் ட்வீட்

தான் நான்காவது திருமணம் செய்து கொண்டதாக பேசி வரும் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை வனிதா.

நான்காவது திருமணம் பற்றி உங்ககிட்ட சொல்ல முடியாது... வனிதாவின் ட்வீட்

கடந்த சில நாட்களாகவே நடிகை வனிதா நான்காவது திருமணம் செய்து கொண்டதாக சமூகவலைதளங்களில் சில தகவல்கள் உலா வந்துக் கொண்டிருகிறது.

இந்தியாவை சேர்ந்த பைலட் ஒருவருடன் வனிதாவுக்கு காதல் மலர்ந்ததாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள ஒரு கோவிலில் இருவரும் ரகசியம் திருமணம் நடந்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

மேலும் வனிதா தனது கழுத்தில் அணிந்திருக்கும் கறுப்பு மணி அவரது புதிய கணவர் அணிவித்ததுதான் என்றும் கூறப்பட்டது. 

ஆனால் இந்த வதந்திகளுக்கு  ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளார்வனிதா விஜயகுமார் . இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்ட அவர், வதந்திகளை நம்பாதீர்கள், நான் இன்னும் சிங்கிள் மற்றும் அவைலப்பிள் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள் அவைலப்பிள் என்று கூறியதற்கு அர்த்தம் என்ன? அடுத்த திருமணத்திற்கு தயாராக உள்ளேன் என்று விளம்பரப்படுத்தி கொள்கிறீர்களா என்று கேள்விகளை சாரமாரியாக வீசி வருகின்றனர்.

தன்னுடைய திருமண வாழ்க்கை குறித்து பேசும் நெட்டிசன்களை வெளுத்து வாங்கி வருகிறார் வனிதா. அந்த வகையில் தற்போது நெட்டிசன் ஒருவர், ஒரு நாள் வதந்திகள் உண்மையாகும் போது, இது என் வாழ்க்கை, தயவுசெய்து யாரும் தலையிட வேண்டாம். நான் என் மகள்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைகிறோம் என்று கூறுவார் என பதிவிட்டிருந்தார்.

இதனை பார்த்த வனிதா செம கடுப்பாகியுள்ளார். அந்த நெட்டிசனை திட்டி தீர்த்து பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார் வனிதா. அவர் பதிவிட்டிருப்பதாவது, அப்படி நடந்தால், நானும் என் மகளும் அதனால் மகிழ்ச்சியாக இருந்தால், அப்படியே இருக்கட்டும்... நாங்கள் உங்கள் யாருக்கும் பதில் சொல்லத் தேவையில்லை..

நீங்கள் முட்டாள்தனமாக பேசுகிறீர்கள்... நீங்கள் மனவளர்ச்சியற்றவர்.. உங்கள் வேலையை பாருங்கள் என கடும் கோபமாக பதிவிட்டுள்ளார்.