அரபிக்குத்து பாடலுக்கு பீச்சில் ஆட்டம் போட்ட நடிகை…அனல் பறக்கும் ஹார்ட்ஸ்!

அரபிக்குத்து பாடலுக்கு பீச்சில் ஆட்டம் போட்ட நடிகை…அனல் பறக்கும் ஹார்ட்ஸ்!
Published on
Updated on
2 min read

சோஷியல் மீடியா பக்கங்களான யூடியூப் ஷாட்ஸ், இன்ஸ்டாகிராம் என எந்தப் பக்கம்  திரும்பினாலும் “ஹலமதி ஹபிபோ“ என்றுதான் ஒலித்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு ரசிகர்களிடம் ஏகபோக வரவேற்பை பெற்ற “அரபிக்குத்து“ பாடலுக்கு இளசுகள் முதல் திரைப்பிரபலகங்கள் வரை பலரும் ரீல்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.

முன்னதாக நடிகை சமந்தா, இசையமைப்பாளர் அனிருத், பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் இந்த பாடலுக்கு நடனமாடி அவர்களின் சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டிருந்தனர். தற்போது  இவர்களின்  வரிசையில் புதிதாக நடிகை வேதிகாவும் இணைந்துள்ளார்.

தெலுங்கு, மலையாளம், கன்னடா என அனைத்திலும் நடித்து வந்த வேதிகா தமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான “மதராசி“ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ராகவா லாரன்ஸுடன் இணைந்து “முனி“ அடுத்து “காளை“, “சக்கரக்கட்டி“,, “பரதேசி“ போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். அதற்கு பிறகு அவருக்கு தமிழில் அவ்வளவா எந்த பட வாய்ப்பும் அமையவில்லை என்றே சொல்லலாம். 

இந்நிலையில் தற்போதெல்லாம் சினிமாவில் அதிகம் தலைக்காட்டாத இவர் சமூக வலைத்தளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். அவ்வப்போது தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் நடிகை வேதிகா தற்போது “பீஸ்ட்“ திரைப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள்ஸ் பாடலான “அரபிக்குத்து“ பாடலுக்கு கடற்கரையில் நின்றவாறு செம குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதுமட்டுமில்லாமல் கிட்டத்தட்ட  9 கோடி பார்வையாளர்களை பெற்ற இந்த வீடியோ 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் குவித்திருக்கிறது.

View this post on Instagram

A post shared by Vedhika (@vedhika4u)

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com