விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன்! மறைந்த தோழிக்கு நடிகை யாஷிகா போட்ட உருக்கமான பதிவு!இணையத்தில் வைரல்

விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன்! மறைந்த தோழிக்கு நடிகை யாஷிகா போட்ட உருக்கமான பதிவு!இணையத்தில் வைரல்
Published on
Updated on
2 min read

துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் நடிகை யாஷிகா. அதன்பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபமான இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு எந்த படமும் அமையவில்லை என்றே சொல்லலாம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாஷிகா தனது தோழி பவனிஷெட்டியுடன் காரில் சென்றபோது கார் விபத்துக்குள்ளாகி, பவனிஷெட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில், நடிகை யாஷிகா மறைந்து போன தனது தோழியின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்ஸ்டாகிராமில் உருக்கமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தனது தோழியுடன் எடுத்த புகைப்படத்தை பதிவு செய்து, ‘ நீ மனித உருவில் சூரிய ஒளியாய் இருந்தாய். பல ஆண்டுகளாக உன்னிடம் நான் பழகி நன்றியுள்ளவளாக இருந்திருக்கிறேன். இன்று உனக்கு பிறந்தநாள். ஆனால் நீ இங்கு இல்லை என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இதற்கு காரணம் நான் என்பதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. உன்னுடைய சிரிப்பை நான் ரொம்ப  மிஸ் பண்ணுகிறேன், உன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் உன்னுடைய முகத்தை நான் பார்த்து மகிழ்வேன். நீ அமெரிக்காவில் வேலை செய்துகொண்டு இருந்த போது நமக்குள் நடந்த உரையாடல்கள் இப்போதும் என் கண்முன் வருகின்றன.

உன்னுடைய ஒவ்வொரு கனவையும் நான் நிறைவேற்ற விரும்புகிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள் தோழி, விரைவில் மறுபக்கத்தில் உன்னை சந்திக்கிறேன்! என்று உருக்கமாக நடிகை யாஷிகா பதிவுசெய்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமில்லாமல், இதைப் பார்த்த ரசிகர்கள் கவலை படாதீங்க யாஷிகா என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Y A S H

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com