
சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் மூலம், ரசிகர்களின் கூட்டத்தை அள்ளிச் சென்ற பூஜா ஹெக்டே, பாலிவுட்டில், “கிஸி கா பாய், கிஸீ கீ ஜான்” என்ற படத்தில் நடித்து வருகிறார். அப்போது அவருக்கு நடந்த ஒரு விபத்தால், தசை சிதைந்து, லிகமெண்ட் டேர் ஏற்பட்டுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த நொ;ஐயில், அவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது ஆருதலை தெரிவித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, தற்போது சிகிச்சை பெற்று சரி ஆகி வரும் நிலையில், தற்போது மீண்டும் நடக்கக் கற்றுக் கொண்டு வருகிறார். மேலும், அதனை வீடியோக்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக பதிவிட்டிருந்தார்.
வாழ்க்கையிலேயே இரண்டாம் முறையாக நடக்கக் கற்றுக் கொண்டதாக தனது ஸ்டோரியில் தெரிவித்திருந்த பூஜா ஹெக்டே, ஒரு ஒரு அடியாக நடப்பதை பதிவிட்டிருந்தார். இது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
மேலும் படிக்க | சிம்புவின் பாடலுக்கு வாய் அசைக்க போகும் நடிகர் விஜய்??