தரமான செய்கைக்காக பயிற்சி எடுக்கும் அதிதி ஷங்கர்!

தரமான செய்கைக்காக பயிற்சி எடுக்கும் அதிதி ஷங்கர்!

விருமன் படத்தில் நடிகையாக அறிமுகமாகும் அதிதி ஷங்கர் நடிப்புக்காக பயிற்சி எடுத்து வருகிறார்.

இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஜோடியாக விருமன் படத்தில் அறிமுகமாகிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் விருமன் படத்தின் பூஜை நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஷங்கர் ராம் சரணை வைத்து இயக்கும் படத்தின் பூஜையில் அதிதி கலந்து கொண்டார்.  

இதற்கிடையே விநாயகர் சதுர்த்தி அன்று ரஜினியை சந்தித்து அதிதி ஆசி பெற்றுக் கொண்டார். விருமன் படத்தில் நடிப்பதால், கூத்துப்பட்டறை கலைராணியிடம் நடிப்புப் பயிற்சி எடுத்து வருகிறார் அதிதி. ஏற்கனவே அவர் நடனத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.